குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அயன்மேன் சம்பியன்சிப் (Ironman World Championship)போட்டியில் ஜெர்மன் வீரர் பற்றிக் லேங் வெற்றியீட்டியுள்ளார். ஹவாய் கய்லுவா கோனாவில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கனேடிய வீரர் லயனல் சண்டேர்ஸ் ( Lionel Sanders ) இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்டுள்ளார்.
மகளிர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் டேனியல் ரஃப் ( Daniela Ryf ) முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டு சம்பியன் பட்டம் வென்றுள்ளார். மூன்று விளையாட்டுக்களை உள்ளடக்கி இந்த அயர்ன்மேன் போட்டி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நீச்சல், சைக்கிளோட்டம் மற்றும் மரதன் ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியே இந்தப் போட்டி நடைபெறுகின்றது.
Spread the love
Add Comment