உலகம் பிரதான செய்திகள்

19 வயது மாணவன் பிரித்தானியாவின் இளம் கோடீஸ்வரரானார்..


ரியல் எஸ்டேட் வியாபாரம் மூலம் அதிக லாபம் ஈட்டியதால் 19 வயது இளைஞர்,   இங்கிலாந்தின் இளம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

லண்டனை சேர்ந்தவர் 19 வயதான இந்திய வம்சாவளியான அக்ஷய் ரூபரேலியா பாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற நிலையில் தற்போது இவர் இங்கிலாந்தில் உள்ள இளம் வயது கோடீசுவரர்களில் ஒருவர் ஆகியுள்ளார்.   பாடசாலையில் கல்வி கற்றுக் கோண்டே  இணையம் மூலம் இவர்  ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகின்றார். இதன்மூலம்  அவர் ஒரு வருடத்தில் 100 மில்லியன் பவுண்ட்ஸ்  பெறுமதியான வியாபாரம் செய்து  1.3  மில்லியன் பவுண்ட்ஸ்   லாபம் ஈட்டியுள்ளார்.

கடந்த 16 மாதங்களுக்கு முன்பு உறவினர்களிடம் 7 ஆயிரம் பவுண்ட்ஸ் கடன் பெற்று தனது    வியாபாரத்தை ஆரம்பத்திருந்த இவரிடம் தற்போது 12 பேர் வேலை செய்கின்றனர்.

காது கேளாத இவரது தாய் மற்றும் தந்தையும்    தங்களது மகன் குறித்து பெருமைப்படுகின்றனர். பொருளாதாரம் மற்றும் கணக்கு பாடம் பயில ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு இடம் வழங்க முடிவு செய்துள்ளது.  எனினும்  அதில் சேர்ந்து படிப்பது குறித்து அவர் முடிவு செய்யவில்லை எனவும்  தனது வியாபாரத்தை மேலும் வளர்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது இவரது ரியல் எஸ்டேட் நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள பெரிய கம்பெனிகளில் 18-வது இடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.