வடக்குக்கு ஒரு நீதியும் தெற்குக்கு ஒரு நீதியும் என இரண்டு நீதிகள் இல்லை எனவும் நாட்டில் ஒரு சட்டமே உள்ளதெனவும் காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளும் அனைவருக்கெதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் தெற்கில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்ததைப் போன்று விரைவில் சிவாஜிலிங்கத்துக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Add Comment