இலங்கை

சவுக்கடி இரட்டைப் படுகொலை சந்தேகநபர்களிடமிருந்து நகைகள் மீட்பு

கடந்த  ஒக்டோப் 18ம் திகதி  (தீபாவளித் தினமன்று)     ஏறாவூர்   சவுக்கடி கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட   தாய் மற்றும் அவரது 11  வயது மகன் ஆகியோரின் படுகொலையின் பிரதான சூத்திரதாரியெனச் சந்தேகிக்கப்படும் நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அவரது சகாவான மற்றொரு நபர், நேற்றுக் கைதுசெய்யப்பட்டாரெனத் தெரிவித்துள்ள  காவல்துறையினர் அவரிடமிருந்து நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். புpரதான  சந்தக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நோக்கில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார் எனவும் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மற்றைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணையும் அவரது மகனையும் கொலை செய்து விட்டு நகைகளை அபகரித்த கொலைகாரர்கள், அவற்றை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் சென்று அடகு வைத்திருந்த நிலையில் குறித்த தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. ஏறாவூர் சவுக்கடி பகுதியில்   27வயதுடைய  பீதாம்பரம் மதுசாந்தி  எனும் தாயும் அவரது 11வயது  மதுசான்  என்ற மகனுமே இவ்வாறு  கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இணைப்பு 2  – ஏறாவூரில்  தாயும் மகனும் கொல்லப்பட்டமை தொடர்பில் ஐவர் கைது

Oct 19, 2017 @ 07:21

ஏறாவூர் சவுக்கடியில் நேற்றையதினம் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில  ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ஏறாவூர்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  தெரிவித்தனர். கொலை இடம்பெற்ற பகுதியில் நடைபெற்ற தீவிர விசாரணைகளின் பின்  மோப்ப  நாய்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது,  இருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, இவர்கள் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்படுள்ளாரெனவும்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கொலை நடைபெற்ற வீட்டுக்கு சுமார் 150 மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து உடைந்த நிலையில் கோடாரி ஒன்றிணையும் மீட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் சவுக்கடி பகுதியில்   27வயதுடைய  பீதாம்பரம் மதுசாந்தி  எனும் தாயும் அவரது 11வயது  மதுசான்  என்ற மகனுமே இவ்வாறு  கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

மட்டக்களப்பில் தாயும் மகனும்     கழுத்து வெட்டப்பட்டு கொலை

Oct 18, 2017 @ 08:43

மட்டக்களப்பு  ஏறாவூர்  காவல்துறை பிரிவுக்குட்பட்ட   சவுக்கடியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் மகனும்   சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். 27 வயதுடைய  பீதாம்பரம் மதுசாந்தி  எனும் தாயும் அவரது 11வயது  மதுசான்  என்ற மகனுமே இவ்வாறு  கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில்    சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.     வீட்டின் கூரையினூடாக வீட்டினுள்   நுழைந்தவர்கள் இருவரையும்  கொலை செய்துள்ளதுடன், அங்கிருந்த நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவர் ஏழு வருடங்களுக்கு மேலாக மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.