உலகம் பிரதான செய்திகள்

வடகொரியா அணுவாயுத திட்டங்களை கைவிடவேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கோரிக்கை :குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடகொரியா தனது அணுவாயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிடவேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இன்று வேண்டுகோள் விடுக்கவுள்ளனர். வடகொரியாவிற்கு எதிராக புதிய தடைகளை விதிப்பது என ஐரோப்பிய ஓன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் இணங்கியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இன்று கலந்துரையாடலிற்கு பின்னர் இந்த வேண்டுகோளை விடுக்கவுள்ளனர்.

வடகொரியாவை  தனது ஆயுததிட்டங்களை முழுமையாக ஆராயத்தக்க விதத்தில் கைவிடுமாறு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கோரவுள்ளனர். மேலும் வடகொரியாவிற்கு எதிரான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயார் எனவும் அவர்கள் அறிவிக்கவுள்ளனர்.

North Korean leader Kim Jong Un (not pictured) guides the launch of a Hwasong-12 missile in this undated combination photo released by North Korea’s Korean Central News Agency (KCNA) on September 16, 2017. KCNA via REUTERS

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.