Home இலங்கை கொத்தமலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

கொத்தமலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

by admin


கொத்தமலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தீபாவளியை முன்னிட்டு புத்தளத்தில் இருந்து வியாபாரம் செய்வதற்காக தலவாக்கலைக்கு சென்ற புத்தளத்தினை சேர்ந்த    18 வயதுடைய முகமது நிலாமுதீன் முகமது அஸ்ஜட்  என்பவரே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர்   கடையொன்றினை வாடகை அடிப்படையில் பெற்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் வியாபரம் செய்துள்ளதாகவும் கடந்த 17ஆம் திகதி   கடையிலிருந்து சென்றவர், காணாமற்போயுள்ளதாக   தலவாக்கலை காவல் திலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், இன்று கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More