குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கத் தயார் என ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தலில் அபே வெற்றியீட்டியுள்ளார். இதனையடுத்து வடகொரிய விவகாரத்தில் உறுதியான தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வடகொரியாவின் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் அபே, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டியுள்ளார். சில தீர்மானங்களை எடுப்பதற்கு மக்களின் ஆணையை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே ஓராண்டுக்கு முன்னதாக தாம் தேர்தலை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். வடகொரியா பிரச்சினை விவகாரத்தில் ஸ்திரமான ராஜதந்திர அணுகுமுறை அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment