இலங்கை பிரதான செய்திகள்

அதிகாரத்தை மேலும் பகிர்வதனால் மட்டும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது – கோதபாய ராஜபக்ஸ


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

அதிகாரத்தை மேலும் பகிர்வதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிநோக்கி வரும் பிரச்சினைகளுக்கு மேலும் அதிகாரங்களை பகிர்வது தீர்வு திட்டமாக அமையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட நடைமுறைச்சாத்தியப்பாடுடைய விடயங்களை அநேககர் மறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். யுத்தத்தை முடிவுறுத்த முடியாது என கூறப்பட்ட காலத்தில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 12000 முன்னாள் போராளிகளை விடுவித்தமை மிகப் பெரிய ஓர் வெற்றியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.