இலங்கை பிரதான செய்திகள்

ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான வழக்கு யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும்?

பப்லோ டி கிரிவ்

இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் நாட்டில் தொடரப்பட்டுள்ள போர்குற்ற வழக்கு, இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம் என ஐநா எச்சரிக்கை செய்துள்ளது.

இலங்கை வந்துள்ள   ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிவ் தனது இரண்டு வார கால விஜயத்தின் முடிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இன்று  செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் ராணுவத் தளபதி ஜயசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ பொறுப்புக் கூறல் கோரப்படலாம் எனவும்  அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் 2009 ஆம் ஆண்டு, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்களை நடத்தியதுடன், ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் காணாமல் ஆக்கப்படுவதற்கும், சித்திரவதை செய்யப்படுவதற்கும் காரணமாக இருந்த ராணுவ குழுக்களுக்கு  பொறுப்பதிகாரியாக செயற்பட்டிருந்தார் என தென் அமெரிக்கா நாடுகளில் மனித உரிமை குழுக்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் ஜயசூரியவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்கு தாக்கல் செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

யுத்த மோதல்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் உரிய நம்பகமான பொறுப்பு கூறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்றும் பப்லோ டி கிரிவ் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னரான நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகள் அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதற் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்த அவர், இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்துடன், நான்கு விஜயங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கும் நோக்கில் முதல் மூன்று விஜயங்களும் அமைந்திருந்ததாகக் கூறிய அவர், இலங்கை அரசு உறுதியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஒரு சிக்கலான சூழலில், ஐநாவின் மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் தேவைக்காக இந்த விஜயம் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். காணாமல் போனோருக்கான அலுவலகம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அதற்கான அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது அரச தரப்பினர் மட்டுமல்லாமல் நாட்டின் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதிகளுக்கும் விஜயம் செய்து பல்வேறு தரப்பினரையும், பாதிப்புக்கு உள்ளானவர்களையும் சந்தித்துள்ளதாகவும், இந்த சந்திப்புக்கள் தொடர்பிலான அறிக்கையும், நிலைமைகள் தொடர்பிலான தனது பரிந்துரைகளையும் உள்ளடக்கிய முழுமையானதோர் அறிக்கை அடுத்த வருடம் ஐநா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • ஜகத் ஜயசூரியாவுக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டு வழக்கு பாரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம்?? ஜயா பப்லோ குளக்காட்டு நரி சல சலப்புக்கு அஞ்சாது, தமிழர்களுக்கு எதிரான கொலை கொள்ளை கற்பழிப்பு என்பது சிங்களத்தின் குலத்தொழில் , தமிழர்களை இனப்படு கொலை செய்த அத்தனை சிங்கள காடைப்படையையும் போர்வீரர்கள் என்று பிரகடனப் படுத்தியவர்கள் நாங்கள் , எங்களது காடையர் கூட்டத்தை பயங்கரவாதிகள் என்று சொல்லுமளவிற்க்கு நாங்கள் காக்கைவன்னியன் கூட்டத்தை சேர்ந்தவர்கள் அல்ல , ஜயசூரியாவிற்க்கு எதிரான குற்றசாட்டுக்கு அவரது களுத்துக்கு சுருக்கு கயிறாக மாறுமாக இருந்தால் அதனால் எங்களது ஆட்சிக்கு ஆபத்து அவருடன் நின்று இனப்படு கொலை செய்த அத்தனை காடையர்களுக்கும் ஆபத்து , இதை தவிர்க்க வேண்டும் என்றால் இரவு தூக்கத்திற்க்கு சென்ற ஜயகத்சூரியா மாரடைப்பால் காலமானார், அல்லது அவர் வாகனவிபத்தில் அகால மரணம் அடைந்தார் , இதற்க்குபின் வழக்கு புஸ்வாணம் தானே? சிங்களத்திற்க்கு தெரியாத கொலையா? கொள்ளையா ? கற்பழிப்பா? . ராஜன்.