குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகில் மிகவும் பாதுகாப்பானது பிரித்தானியாவின் ஜனநாயகம் எனவும் அது தொடர்ந்தும் அவ்வாறானதாக காணப்படும் எனவும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் பேச்சாளர் ஓருவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த சர்வஜனவாக்கெடுப்பில் வெளிநாடொன்று தலையிட்டதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்றைய செய்தியாளர் மாநாட்டில் சர்வஜனவாக்கெடுப்பில் வெளிநாட்டின் தலையீடு குறித்து பிரதமர் கரிசனையுடன் உள்ளாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள அவரது பேச்சாளர் இந்த கரிசனைகள் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் ஜனநாயகமே உலகில் என்றும் பாதுகாப்பானது என நாங்கள் தெரிவித்து வந்திருக்கின்றோம் எனவும் அது தொடர்ந்தும் பாதுகாப்பானதாக விளங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment