உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்றவர் வாகன விபத்தில் பலி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கொஸ்டா ரிக்காவின் தலைநகர் சான் ஜோஸில் நடைபெற்ற அரை மரதன் ஓட்டப் போட்டியொன்றில் பங்கேற்ற வீரர் ஒருவர் வாகன விபத்தில் கொல்லப்பட்டுள்ளார். மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தியவர், மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்றவர் மீது வாகனத்தைக் கொண்டு மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் வெனிசுலாவைச் சேர்ந்த மரதன் ஓட்ட வீரர் டேவிட் ஜானெஸ் பச்சேகோ (  David Yáñez Pacheco )என்பவரே உயிரிழந்துள்ளார். வாகனத்தில் மோதுண்டவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது இவர் உயிரிழந்துள்ளார். போட்டி தொடர்பில் சகல ஏற்பாடுகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது எனவும், எனினும் தவிர்க்க முடியாத வகையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகன விபத்துடன் தொடர்புடைய நபர் தப்பிச் சென்றதாகவும், பொலிஸார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.