குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு, ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சவால் விடுத்துள்ளார். புதிய அரசியல் சாசனம் தொடர்பில் விவாதமொன்றை நடாத்தத் தயார் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தங்காலையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.
மேலும் புதிய அரசியல் சாசனம் நாட்டை பிளவடையச் செய்ய உள்ளதாகவும் அதற்கு ஜே.வி.பி ஆதரவளிப்பதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தி வருவதாகவும் இந்த விடயம் குறித்த விமல் வீரவன்சவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் விவாதம் நடத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். விமல் வீரவன்ச இது தொடர்பிலான விவாதமொன்றை நடாத்த விரும்பினால் கட்சியின் ஓர் உறுப்பினரை அனுப்பி வைக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment