இலங்கை பிரதான செய்திகள்

பாராளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டும் என்கிறார் விமல் – அரசியலமைப்பை ஆதரிப்பவா்களை கொல்ல வேண்டும் என்கிறார் கமால்

பாராளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டியது அவசியம் என, அண்மையில், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்க தெரிவித்தமை  சபாநாயகர் கரு ஜெயசூரிய  கவனத்தில் எடுத்துள்ளார்.  பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்சவின் இந்தக் கருத்தானது   பாராளுமன்ற ஜனநாயகம்  மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு  என்பவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும்  சபாநாயகரிடம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் அடுத்த அமர்வின் போது  நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  இலங்கையில்; பிரிவினையை உருவாக்கும்  புதிய அரசியலமைப்பை ஆதரிப்போர் துரோகிகள் எனவும்  அவர்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் எனவும் முன்னாள் முன்னாள் உயர் இராணுவ அதிகாரியும்    வன்னி பாதுகாப்பு படைகளின் தளபதியுமாக செயற்பட்டவருமான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஸ தலைமையில் கடந்த சனிக்கிழமை நுகேகொடயில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதாக  தெரிவிக்கின்றனர் எனவும்    யுத்தம் நிறைவடைந்த பின்னர், சிறுபான்மை மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும்  பெரும்பான்மை இன சமூகத்திற்கு வழங்கப்படும் சகல விடயங்களும் சிறுபான்மை மக்களுக்கும் வழங்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்;.

அமிர்தலிங்கம்,  இரா. சம்பந்தன் ஆகியோர்  எதிர்க்கட்சித் தலைவர்களாவும்   ,  சிவா பசுபதிக்கு சட்டமா அதிபராகவும்  ஸ்ரீபவன் பிரதம நீதியரசராகவும்   ட்ராவிஸ் சின்னையாவுக்கு கடற்படை தளபதியாகவும்  வரமுடியுமென்றால் தமிழர்களுக்கு வேறு என்ன பிரச்சினை உள்ளது எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருக்கும் போது எதற்காக புதிய அரசியலமைப்பை கொண்டு வருகின்றனர் என தெரிவித்த அவர்  தமிழ் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயற்படும் மேற்கத்தேய சக்திகள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் தேவைக்காகவே அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை கொண்டுவரவுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் நீண்டகாலம் கடமையாற்றியவன் என்ற ரீதியில், அம்மக்களின் மனநிலையை   அங்குள்ள அரசியல்வாதிகளை விட தான் நன்கு உணர்ந்துள்ளதாகவும்    யுத்தம் நிறைவடைந்த பின்னர் அமைதியான சூழல் ஏற்பட்டு, பயமின்றி வாழ்வதாக அம் மக்கள் தன்னிடம் தெமரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய அரசியலமைப்பு   சிறுபான்மை மக்களுக்கு   எந்த வகையிலும் நன்மையை கொடுக்காது எனவும் அது    தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டு, தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் தாளத்துக்கு ஆடும் வடக்கின் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே நன்மை பயப்பதாகவே   அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.