இலங்கை பிரதான செய்திகள்

மா.இளஞ்செழியன், புத்த பெருமான் அளவுக்கு ஞானம் பெற்றவர்


யாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் மிருக பலியிடல் வழிபாட்டு முறையான வேள்விக்கு தடை விதித்து தீர்ப்பளித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், புத்த பெருமான் அளவுக்கு ஞானம் பெற்றவர் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட இந்துக் கோவில்களில் வேள்விகளின் போதும்  ஏனைய   பூசைகளின் போதும் மிருகங்களை பலியிடுவதற்கு முற்றாக தடை விதித்து நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.  இவ்வாறு  இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியமை தொடர்பிலேயே   மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நீதிபதி மா.இளஞ்செழியனின் இந்த தீர்ப்பை ஏனைய நீதிபதிகளும் முன்னுதாரணமாக எடுக்க வேண்டும் எனவும்  அரசியல்வாதிகளும் இதுபோன்ற நல்லவிடயங்களை   பின்பற்ற வேண்டும் எனவும்  மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேர்வின் சில்வா முன்னேஸ்வரம் கோவிலில் இடம்பெறுகின்ற மிருக பலி பூசைக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply