இலங்கை பிரதான செய்திகள்

மீனவர்கள் பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்

மேதகு ஜனாதிபதி அவர்கள்,

ஜனாதிபதி செயலகம்,

கொழும்பு.

 

மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,

 

முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வடக்குமாகாணசபையின் உறுப்பினர் மற்றும் வடக்கு மாகாண மீன்பிடிவிவகாரங்களுக்கான அமைச்சர் என்ற வகையில் எனது மாவட்டமும், அதன்கரையோர மக்களும் அனுபவிக்கும் கஷ்டங்களை தங்களது மேலானதும்,அவசரமானதுமான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

 

இந்த நாட்டின் அரச தலைவர் எனும் அதிகாரத்துக்கும் அப்பால் சுற்றாடல்பாதுகாப்புக்கும் பொறுப்பானவர் என்ற காரணத்தாலும் பல்வேறுநெருக்குவாரங்களுக்கு மத்தியிலும்கூட சூழல் பாதுகாப்பில் தாங்கள்கடைப்பிடிக்கும் உறுதியான நடைமுறைகளைக் கருத்திற் கொண்டும்முக்கியமான விடயங்களை தங்களின் கவனத்திற்கு தருகிறேன்.

 

நான் முன்வைக்கும் விடயங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரியதுமட்டுமல்லாது பல கரையோர மாவட்டங்களில், குறிப்பாக யுத்தகெடுபிடிகளால் அரச நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருந்த அனைத்துமாவட்டங்களிலும் இவ்வாறான அவசரமான தீர்வு காணவேண்டிய விடயங்கள்இருக்கும் எனவும் நம்புகிறேன்.

 

அண்மைக்காலமாக, குறிப்பாக யுத்த நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பின்பு,மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் தமது கரைவலைத் தொழிலுக்கு உழவுஇயந்திரங்களைப் பயன்படுத்துவதை பரவலாகக் காணமுடிகிறது.

 

மீன்பிடித் தொழிலுக்காக வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும்தொழிலாளர்களே மேற்படி சட்டவிரோத மீன்பிடி முறையைபயன்படுத்துகிறார்கள். உள்ளூர் மீன்பிடித் தொழிலாளர்கள் இந்த முறையைபயன்படுத்துவதிலிருந்து சுய கட்டுப்பாட்டுடன் தம்மை விலக்கிவைத்துள்ளனர்.

 

70 Km நீளமான கடல் எல்லையைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 80வரையிலான கரைவலை தொழிலிடங்கள் உள்ளன. ஒவ்வொருகரைவலையிலும் 40 பேர் வரையிலும் தொழில் புரிகின்றனர். ஆனாலும் இன்றுஅவர்களால் சீராக தொழில் செய்ய முடியாத அளவுக்கு, சட்ட விரோதமானமுறையிலான உழவு இயந்திரமுறை எவ்வித கட்டுப்பாடின்றிமேற்கொள்ளப்படுகின்றது.

 

வெளிமாவட்ட மீனவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான உழவுஇயந்திர முறையை கட்டுப்படுத்த முடியாதவர்களாக, அல்லதுவிரும்பாதவர்களாகவே இம் மாவட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல்திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளனர் என குற்றஞ் சாட்டப்படுகின்றது.

 

400ற்கும் அதிகமான உழவு இயந்திரம் மூலமான மீன்பிடி முறையினால்உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுகிறது என்பதற்கும்அப்பால் இயற்கையாகவே நிறைந்த வளங்களைக் கொண்ட 70 Km நீளமானகடற்கரை அழிவுக்குள்ளாகிறது.

 

  1. உழவுஇயந்திரங்களைதொடர்ந்து இயக்குவதன் மூலம் கடற்கரை குன்றும்குழியுமாகி இயல்பாக பாவனைக்குதவாததாக மாறுகின்றது.

 

  1. கடல்சார்ந்ததாவரங்களான ஆம்பல், இராவணன் மீசை, அடம்பன் கொடிஅனைத்தும் அழிக்கப்படுகின்றன.

 

  1. இத்தாவரங்களைஉண்டுவாழும் மணலை போன்ற மற்றும் சிறிய மீன்கள்உணவின்றி அழிவுக்குள்ளாகின்றது.

 

  1. கைகளால்இழுத்துவரப்படும்போதுகிடைக்கும் ஒரு சில செக்கன்இடைவெளி இல்லாமல் கரைவலை மடியை தொடர்ச்சியாக இயந்திரங்கள்மூலம் இழுத்து வருவதனால் சேறு நிறைந்த பிட்டி வழித்து வரப்படுவதனால்அதனுள் வாழும் மீன்கள் அழிந்து போகின்றன. இதன் காரணமாக சிறு தொழில்செய்யும் மீனவர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்.

 

  1. கொக்கிளாய்ப்பகுதயில்முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட சட்டவிரோதஉழவு இயந்திர முறையினால் கூலிவேலையாக கரைவலையில்ஈடுபடுபவர்களது தொழில் வாய்ப்புகளும் பறிபோய் விட்டன.

 

நாட்டின் பாதுகாக்கப்பட வேண்டிய கரையோர சுற்றுச் சூழலின்பாதுகாப்பிலும், ஏழை மீனவர்களினது வாழ்வாதாரத்திலும் பாரிய அளவிலானபாதிப்பை ஏற்படுத்துகின்ற சட்டவிரோத உழவு இயந்திர உதவியுடனானமீன்பிடி நடவடிக்கைகளை உடன் நிறுத்த தாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

தங்கள் சுற்றுச் சூழல் அமைச்சின் கீழ் வரும் திணைக்கள அதிகாரிகள் மூலம்பாரபட்சமற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடியகடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும்கேட்டுக்கொள்கிறேன்.

 

நன்றி.

 

 

 

தங்கள் உண்மையுள்ள

 

கந்தையா சிவநேசன் (மா.உ)

மீன்பிடி விவகார அமைச்சர்,

வடக்கு மாகாணம்

 

பிரதி : மீன்பிடி அமைச்சர்,

முதலமைச்சர், வடமாகாணம்,

ஆளுனர், வடமாகாணம்

அரசாங்க அதிபர், முல்லைத்தீவு

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers