குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவிற்கு எதிரான மகளிருக்கான ஐஸ் ஹொக்கிப் போட்டியில் கனேடிய மகளிர் அணி அபார வெற்றியீட்டியுள்ளது. ஐந்துக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் கனேடிய அணி அபார வெற்றியீட்டியுள்ளது. 2018ம் ஆண்டில் தென்கொரியாவின் Pyeongchang ல் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்த இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டியில் மோதிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்தப் போட்டியானது இறுதிப் போட்டிக்கான முன்னோட்டம் என விளையாட்டுத்துறை வல்லுனர்களினால் ஊகம் வெளியிடப்பட்டிருந்தது. பொஸ்டன் பல்கலைக்கழக அக்னனிஸ் அரினா ( Agganis Arena )ல் இந்தப் போட்டி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment