இலங்கை பிரதான செய்திகள்

அநுராதபுரம் விமானப்படைப் தளத் தாக்குதல் – வெடிப்பொருட்கள் மீட்பு:-

கிளிநொச்சி வட்டகச்சி புழுதியாறு குளபகுதயில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யுத்த காலத்தில் 2008 ஆம் ஆண்டு அநுராதபுரம் விமானப்படைத் தளம் விடுதலைப்புலிகளினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட முதல் குறித்த பிரதேசத்தில் தாக்குதல் ஓத்திகை பார்க்கப்பட்டதாகவும் அங்கு மாதிரி விமான ஓடுதளம் என்பனவும் காணப்பட்டதாகவும் காவல்துறை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

விமானப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக விமானப்படயினர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனை தொடர்ந்து கிளிநொச்சி நீதவான் நீதமன்றின் அனுமதி பெற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 60 மில்லி மீற்றர் 10 மோட்டார் செல்கள், 81 மில்லி மீற்றர் 01 மோட்டார் செல்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த தேடுதல் நேற்று இரவு விசேட அதிரடி படையினர், காவல்துறைியினர், விமானப்படையினர் ஆகியோா் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

  

Add Comment

Click here to post a comment

Leave a Reply