இலங்கை பிரதான செய்திகள்

சீனாவுடனான உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன – இலங்கை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சீனாவுடனான உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கின் தலைமையின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்காக மீளவும் ஜின்பிங் தெரிவானமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிக நீண்ட காலமாக சிறந்த உறவுகள் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஜின்பிங்கின் இரண்டாவது பதவிக் காலத்தில் இலங்கையுடனான பிணைப்பு இன்னும் வலுப்பெறும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.