இலங்கை பிரதான செய்திகள்

சயிட்டம் குறித்த தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – IUSF


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி (சயிட்டம்) குறித்த தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டம் வெறும் ஓர் கண்துடைப்பு என தெரிவித்துள்ளது. ஒன்றியத்தின் பதில் அழைப்பாளர் மங்கள மத்துமகே இதனைத் தெரிவித்துள்ளார்.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை லாப நோக்கமற்ற நிறுவனமாக மாற்றுவதில் உடன்பாடு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது கோரிக்கையானது தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்ய வேண்டும் என்பதே தவிர, இவ்வாறான தீர்வுத் திட்டம் ஒன்றல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் தற்போதைய தீர்வுத் திட்டம் முகாமைத்துவத்தை மாற்றும் வகையிலானதே தவிர நிரந்தர தீர்வுத் திட்டமல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக கல்வி தனியார்மயப்படுத்தப்படுவதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers