இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கீனன் ( David McKinnon) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசாங்கத்துக்கும் கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் மேலும் வலுவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ருவன் விஜேயவர்த்தன இலங்கையின் அபிவிருத்திக்கு கனடா வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் கனடாஇலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பினை வடழங்க வேண்டும் எனவும் ருவன் விஜேயவர்த்தன, டேவிட் மெக்கீனனிடம் விடுத்துள்ளார்.
Spread the love
Add Comment