உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

தமக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்துள்ளதாக ஆஸி ஊடகம் மீது தொடுத்த வழக்கில் கெய்ல் வெற்றி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்துள்ளதாகத் தெரிவித்து அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றின் மீது வழக்குத் தொடுத்திருந்த, மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் அந்த வழக்கில் வெற்றியீட்டியுள்ளார். அவுஸ்திரேலிய ஊடகமான பியர் பக்ஸ்  ( Fairfax   ) பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவித்து கெய்ல் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

பெண் மசாஜ் நிபுணர் ஒருவர் முன்னிலையில் தனது அந்தரங்கத்தை கெய்ல் காண்பித்தார் என ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 2015ம் ஆண்டில் சிட்னில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும், இது போலியான செய்தி எனவும் கெய்ல் வாதாடியிருந்தார். மேலும் இந்த வழக்குத் தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்யவது குறித்து ஆராய்ந்து வருவதாக  பியர் பக்ஸ்   ஊடகம் தெரிவித்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.