இலங்கை பிரதான செய்திகள்

கட்டார் – இலங்கைக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

கொழும்பில் நேற்றுக் காலை (30) ஆரம்பமான கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இன்றைய (31) அமர்வில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான வரத்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் கட்டார் நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேக் அஹமட் பின்; ஜாஷிம் பின்; முஹம்மட் அல் தானிக்குமிடையில் இந்த    ஒப்பந்தம்; கைசாத்திடப்பட்டது.

உல்லாசப் பயணத்துறை, சமையல் எரிவாயு, விமானப்போக்குவரத்து உள்ளடங்கிய இன்னோரன்ன துறைகளில் பரஸ்பர நாடுகளின் மேம்பாடு  தொடர்பிலேயே ஒப்பந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கடந்த  29ம் திகதி    கொழும்பு வந்திருந்த கட்டார் வர்த்தக அமைச்சர் தலைமையிலான 20 பேர் அடங்கிய உயர் மட்ட வர்த்தகத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி ,  பிரதமர் மற்றும் அமைச்சர் அர்ஜூன ரனதுங்க ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap