இலங்கை பிரதான செய்திகள்

சாய்ந்தமருது பிரதேசத்தில் மூன்றாவது நாளாக பூரண ஹர்த்தால்:-

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை உடனடியாக வர்த்தமானியில் பிரகடனம் செய்யுமாறு வலியுறுத்தி இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாக சாய்ந்தமருது பிரதேசத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இப்பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் பொதுச் சந்தைகள் எவையும் திறக்கப்படவில்லை. அரச நிறுவனங்கள், பாடசாலைகள், அரச, தனியார் வங்கிகள் எவையும் இயங்கவில்லை. இதனால் பொதுப் போக்குவரத்து சேவைகள் முற்றாக ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது நகரம் எங்கும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன், பல்வேறு கோஷங்கள் அடங்கிய பதாதைகளும் தொங்கவிடப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்னாள் திங்கட்கிழமை ஆரம்பமான சத்தியாக்கிரக போராட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சாய்ந்தமருது பிரதேசத்தின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து மாளிகைக்காடு பிரதேசத்திலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.