2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் சூழல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் குறித்த நிபுணர் குழுவின் முதலாவது அறிக்கை வரைபு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. பேராசிரியர் மொஹான் முனசிங்க அவர்களினால் இவ் வரைபு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
2030 ஆம் ஆண்டாகும்போது பொருளாதாரம், சமூக மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளில் இலங்கை அடைய வேண்டிய பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் குறித்த பேண்தகு அபிவிருத்தி நோக்கை வரைவதற்காக ஜனாதிபதியினால் கடந்த ஜனவரி மாதம் பேராசிரியர் மொஹான் முனசிங்க தலைமையில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment