Home இலங்கை வவுனியா சித்தி விநாயகர் ஆலய சிலைகள் உடைப்பு.

வவுனியா சித்தி விநாயகர் ஆலய சிலைகள் உடைப்பு.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வவுனியா செட்டிக்குளம் முதலியார்குளம் பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலய சிலைகள் விசமிகளால் உடைக்கப்பட்டு உள்ளது.  ஆலயத்தின் நவக்கிரக விக்கிரகங்கள் , மற்றும் பிள்ளையார் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டு உள்ளன. குறித்த விக்கிரகங்களை இருப்பிடங்களில் இருந்து பெயர்த்து வீசியுள்ளனர்.

இன்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆலயத்திற்கு சென்ற நிர்வாகத்தினர் சிலைக்கள் சேதமாக்கப்பட்டமையை அவதானித்த உடன் செட்டிக்குளம்  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

அதேவேளை கடந்த மாதம் மன்னார் பகுதிகளில் இந்து ஆலயங்கள் மற்றும் ஆலயத்தினுள் இருந்த தெய்வ விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More