Home இலங்கை பெல்லன்வில தேரரின் கருத்துக்கு CPA எதிர்ப்பு..

பெல்லன்வில தேரரின் கருத்துக்கு CPA எதிர்ப்பு..

by editortamil


பெல்லன்வில விமலரதன தேரரின் கருத்தக்கு மாற்றுக் கொள்கைகளுக்காக கேந்திர நிலையம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையமும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரான பாக்கியசோதி சரவணமுத்துவும் பணத்திற்காக புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாக பெல்லன்வில விமலரதன தேரர் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தியும் வெளியிட்டிருந்தது. எனினும் விமலரதன தேரரின் இந்தக் கருத்துக்கு கடும் ஆட்சேபம் வெளியிடுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் தெரிவித்துள்ளது. கடும்போக்குவாத செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பெல்லன்வில விமலரதன தேரர் கருத்து வெளியிட்டிருப்பது கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவான தரப்பினர் தேசத் துரோகிகள் என அடையாளப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More