குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அணியின் இளம் வீரர் குசால் மெண்டிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு, முன்னாள் அணியின் தலைவர் மஹல ஜயவர்தன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவிற்கான கிரிக்கட் சுற்றுப் பயணத்தில் குசால் மெண்டிஸ் இணைத்துக் கொள்ளப்படவில்லை. குசால் மெண்டிஸை, தெரிவுக்குழுவினர் அணியிலிருந்து நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குசால் மெண்டிஸ் போட்டிகளில் பங்கேற்கச் செய்யாவிட்டாலும் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டுமென மஹல ஜயவர்தன தெரிவித்துள்ளார். பல்வேறு விடயங்களை கற்றுக்கொள்வதற்காகவேனும் குசால் மெண்டிஸ் அணயில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment