இலங்கை பிரதான செய்திகள்

இளைஞர் கடத்தல் தொடர்பில் ஹிருனிகா தவிர்ந்த ஏனைய எட்டு போரும் குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளனர்.

தெமட்டகொடை பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பான சம்பவம்  தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தவிர்ந்த  ஏனைய எட்டு சந்தேகநபர்களும் குற்றத்தினை  ஒப்புக் கொண்டுள்ளனர்.   கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நுகேகொடை பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு ஹிருனிகா மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இன்றைய தினம் அந்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் , ஹிருனிகா தவிர்ந்த எட்டுப் பேரும், கடத்தல் சம்பவத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply