Home இலங்கை போத்தல்களில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு பெற்றோல் வழங்கப்படாது

போத்தல்களில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு பெற்றோல் வழங்கப்படாது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போத்தல்களில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு பெற்றோல் வழங்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பெற்றோலுக்கான தட்டுப்பாடு முடிவடையும் வரையில் போத்தல்கள் மற்றும் கலன்களில் எரிபொருளை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படாது என தெரிவித்துள்ளது. வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டில் பெற்றோலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளது. பெற்றோல் தீர்ந்துவிடும் என்ற அச்சத்தினால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அதிகளவில் பெற்றோலை சேமித்து வைத்துக் கொள்ள முயற்சிப்பதனால் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More