குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களிடம் கோரியுள்ளார்.
ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் குறிப்பிட்ட போதிலும், தேர்தல் நடத்தப்படுமா என்பதில் சந்தேகம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஒன்றுக்கு செல்வது அரசாங்கத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்பதனால் சில வேளைகளில் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியம் இல்லாமல் போகலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment