Home இலங்கை தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமே

தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமே

by admin

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ் மக்கள் பேரவை தற்போதையநிலையில் மக்கள் இயக்கமாகவே செயற்படும் என அதன் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.யாழில்.இன்றைய தினம் புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

“தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாகவே தற்போது செயற்பட்டுவருகிறது. அரசியல் ரீதியாக மாறுவதாக இல்லை. தமிழ் மக்களை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டிய அவசியம் எமக்கு உண்டு. தமிழ் மக்கள் பேரவைக்குள் கருத்தொருமித்த அரசியல் கட்சிகள் உள்ளன. அவை தமது அரசியல் பணிகளை முன்னெடுப்பர். அது தொடர்பான எனது தனிப்பட்ட எண்ணத்தை என்னால் இப்போது கூறமுடியாது” என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More