இலங்கை பிரதான செய்திகள்

கல்வி அமைச்சிற்குள் அதிகார பகிர்வு இல்லை

நாட்டில் அதிகார பகிர்வு தொடர்பாக பல மட்டத்திலும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. ஆனால் எங்களுடைய கல்வி அமைச்சில் அந்த அதிகார பகிர்வு இல்லை.எனவே எவ்வாறு நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த அரசாங்கம் அதிகார பகிர்வை வழங்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று )நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று எங்களுடைய கல்வி அமைச்சில் அனைத்து அதிகாரிகளும் அசமந்த போக்குடனேயே செயற்படுகின்றார்கள்.குறிப்பாக பொது மக்களை அழைக்களிப்பதில் இவர்களை போல செயற்பட முடியாது.எனக்கு அரசாங்க வர்த்தமானி மூலம் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும் அது எதுவுமே செயற்படுத்த முடியாமல் இருக்கின்றது.எங்களுடைய அமைச்சரும் அதனை கண்டு கொள்வதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அதே போலவே அதிகாரிகளும் அசமந்த போக்குடனேயே செயற்படுகின்றார்கள். நான் ஒரு தமிழ் அமைச்சராக இருக்கின்ற காரணத்தால் இவ்வாறு செயற்படுகின்றார்களா?என்ற கேள்வியும் எனக்கு எழுகின்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களின் ஆதரவோடு அமைக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கம் கட்டாயமாக சிறுபான்மை மக்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் கடந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமை இந்த அரசாங்கத்திற்கும் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap