இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சவாலுடன் எதிர்நோக்குகிறோம் என இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி, இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் வரும் 16ம் திகதி கொல்கத்தாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தினேஷ் சந்திமால் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்திய அணி சிறந்த பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. இதனால் தாங்கள் சகல ஆட்டத்துறை குறித்து ஆலோசித்து வருகிறோம் எனத் தெரிவித்த அவர் ஆடுகளத்தை பார்வையிட்டு அதற்கு தகுந்தபடி திட்டமிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்
இந்தத் தொடர் தங்களுக்கு சவாலானது தான் என்ற போதிலும் கடந்த காலத்தில் நடந்தவற்றை திரும்பி பார்க்க விரும்பவில்லை எனவும் முன்னேறிச் செல்ல விரும்புகிறோம். எனவும் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.
Add Comment