விளையாட்டு

இரண்டு 500-வது போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் என்ற பெருமை ரகானேக்கு

இரண்டு 500-வது போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் என்ற பெருமையை இந்திய டெஸ்ட் அணியின் துணைக் தலைவர்  ரகானே பெற்றுள்ளார்.  இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் உள்ளூர் தொடரான ரஞ்சி டிராபி தொடரின் 2017-18 சீசனின் 5-வது கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று ஆரம்பமாகியுள்ளன.

ஒரு போட்டியில் மும்பை – பரோடா அணிகள் மோதி வருகின்றன. இந்த  முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் ரகானே இடம்பிடித்துள்ளார்.   இதன்மூலம் 500-வது போட்டியில் பங்கேற்ற   வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த வருடம் கான்பூரில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான  இந்தியாவின் 500-வது டெஸ்ட்   போட்டியிலும் ரகானே இடம்பிடித்திருந்தார்.

இதன்மூலம் இரண்டு முறை 500-வது போட்டியில் கலந்து கொண்ட ஒரே வீரர் என்ற பெருமையை ரகானே பெற்றுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.