உலகம் பிரதான செய்திகள் புலம்பெயர்ந்தோர்

சிறீ லங்காவினால் இழைக்கப்படட சர்வதேச சட்ட மீறல் – கனடிய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்:-

கனடிய மற்றும் சர்வதேச தமிழ் அமைப்புக்களின் கூட்டுக்குழு

நவம்பர் 14-15 ம் திகதிகளில் வான்கூவரில் நடைபெற இருக்கும் .நா.அமைதி பேண் பாதுகாப்பு  அமைச்சர்களுக்கான மாநாடு குறித்த கனடிய மற்றும் சர்வதேச தமிழ் அமைப்புக்களின் கூட்டுக்குழுவின் செய்தியாளருடனான சந்திப்பொன்று   நேற்றய தினம் ஓட் டாவா பாராளுமன்றத்தின்  ஊடக கூடத்தில் இடம் பெற்றது..

இதைத் தொடர்ந்து, சிறீ லங்காவினால் இழைக்கப்படட சர்வதேச சட்ட  மீறல் விடயங்களை முன்னிலைப்படுத்தவும் மற்றும் கனடிய அரசின்  துரித செயற்பாட்டை  வலியுறுத்தியும்  அமைச்சர் ரால்ப்  கூடேல் மற்றும் நீதி அமைச்சர்  ஜோடி வில்சன்றேபோ ஆகியோருக்கு இக் கூட்டுக்குழு எழுதிய கடிதத்தில் கனடிய அரசு இது  குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.. குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தின் 35(1) ம் பிரிவின் பிரகாரம்  வான்கூவர் மாநாட்டில்  சிறீ லங்கா படை அதிகாரிகள் கலந்து கொள்வதைத் தவிர்க்குமுகமாக அவர்களுக்கு  கனடிய நுழைவு அனுமதி மறுக்கப்பட வேண்டும் என அமைச்சர் கூடேல் அவர்களுக்கு இக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதே வேளை  மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் சடடத்தின் பிரகாரம் உடனடியாக விசாரணைகள் தொடங்கப்படவேண்டும் என அமைச்சர் வில்சன் றேய்போ விடமும் இக் குழு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இக் கூட்டுக்குழுவில்  பத்து  கனடிய மற்றும் சர்வதேச தமிழ் அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.

பிரபல கனடிய சட்ட  நிறுவனமான  நவாவில்சன் ஏல்.எல்.பி. இத் தமிழ் அமைப்புக்களைப்  பிரதிநிதித்துவப் படுத்தும் எனவும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

செய்தி அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8, 2017

2017 ஐக்கிய நாடுகள் அமைதிபேண்  பாதுகாப்பு அமைச்சர்கள்  மாநாட்டில் சிறீ லங்கா 

பாதுகாப்பு படை அதிகாரிகள் பங்கு கொள்வதைத் தடுப்பதற்காகவும்   இழைக்கப்பட்ட  சர்வதேச யுத்தக் குற்றங்களுக்கான

பொறுப்புக்கூறலை வலியுறுத்தலுதற்கானதுமான செய்தியாளர் மாநாடு

ஒட்டாவா, ஒன்ராறியோ

கனடிய மற்றும் சர்வதேச பல்வேறு அமைப்புக்களின்  கூட்டுக்குழு இன்று பி.ப. 1:30 மணிக்கு  ஒட்டவா பாராளுமன்றத்தின் ஊடக  கூடத்தில் சந்திப்பொன்றை நிகழ்த்தவுள்ளது. சிறீ லங்கா அரசு சர்வதேச சட்டங்களை மீறியிருப்பதை எடுத்துக்காட்டி அதன் மூலம், நவம்பர் 14, 15, 2017 அன்று வான்கூவரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. அமைதி பேண்  பாதுகாப்பு அமைச்சர்கள்  மாநாட்டில் (UN Peacekeeping Defence Ministerial Conference)   கனடிய அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது  இக்குழுவின் பிரதான நோக்கமாகும். இது குறித்து   அமைச்சர் ரால்ப் கூடேல்  மற்றும் நீதி அமைச்சர் ஜோடி வில்சன்-றேபோ  ஆகிய இருவருக்கும் இக் குழு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்ட பிரிவு 35 (1) இன் கீழ், சிறீ லங்காவின்  ஆயுதப்படைகளின் மூத்த அதிகாரிகள்  கனடாவுக்குள் நுழைவதைத் தடை செய்யவதற்காக அவர்களுக்கு நுழைவு அனுமதி மறுக்கப்பட வேண்டும் என   அமைச்சர் கூடேல் அவர்களிடமும் அதே வேளை, இழைக்கப்பட்ட  யுத்தக் குற்றங்கள் மற்றும் , இனப்படுகொலை விவகாரங்களில் ஈடுபட்ட காரணங்களுக்காக  மனுக்குலத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக்குற்றங்கள் சட்டத்தின் பிரகாரம் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் என நீதி அமைச்சர் ஜோடி வில்சன்-றேபோ   அவர்களிடமும் கடித்த மூலம் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

“சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டத்தை மீறியதற்காக சிறீ லங்காவின் ஆயுதப்படைகளுக்கெதிராக கண்டனத்துக்குரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன. விமானத்திலிருந்து குண்டுகளை மருத்துவமனைகள், பறப்பு தடுக்கப்பட்ட பகுதிகள், அப்பாவி குடிமக்கள் மீது வீசியதுடன்,கற்பனை செய்து பார்க்க முடியாத பல ஈனச் செயல்களை தமது சொந்த மக்களுக்கு எதிராக செய்ததற்கான குற்றச்சாட்டுகளும் ஸ்ரீலங்காவின் ஆயுதப்படையினர்மீது சுமத்தப்பட்டுள்ளன. அவர்களின் இந்த சர்வதேச சட்ட மீறல்களைக் கண்ணால் கண்ட சாட்சியங்களாக கனடாவில் இன்று எம்மோடு வாழ்ந்து வரும் பலரும்,  சிறீ லங்காவின் ஆயுதப்படை அங்கத்தவர்கள் கனடிய மண்ணைச் சுதந்திரமாக மிதிப்பதையிட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறீ லங்காவின் ஆயுதப்படையினர்  குடிமக்கள் நிலங்களை தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருகின்றனர் . தமிழ் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் பாலியல் குற்றங்களும்  அவர்களால் தொடரப்படுகின்றன. இந்த உரிமை மீறல்களுக்கு பெருமளவிலான சான்றுகள் இருந்தபோதிலும், இலங்கை அரசாங்கத்தினுள்ளேயிருக்கும் தப்பிக்கவிடும் கலாச்சாரம் சிறீ லங்காவின் ஆயுதப்படையினரைச் சட்டப்பூர்வமாகப் பாதுகாத்தும் வருகின்றது.” என்கிறார் இக் கூட்டுக்குழுவின் ஆலோசகரும், நவா-வில்சன் எல்.எல்.பி.  சட்ட நிறுவனத்தின் மூத்த பங்குதாரருமான திருமதி மல்லிகா வில்சன்.

இக்குற்றச்சாட்டுக்களுக்கு வலுச்சேர்ப்பதுபோல ஐ.நா. அமைதிகாப்பாளர்களாக ஹெய்ட்டிக்குச் சென்றிருந்த சிறீ லங்கா ஆயுதப்படையினர் அங்கு அடக்குமுறை மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட சம்பவம் அமைகிறது.  ஐ.நா. அமைதிகாப்பாளர்களாக பணியாற்ற சென்றிருந்த சிறீ லங்காவின் ஆயுதப்படையினர் அங்கு குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குழுக்களை நடத்தியதாகவும், ஹெய்ட்டிய பெண்களையும், குழந்தைகளையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 2004 முதல் 2007 வரையான காலப்பகுதியில், பாலியல் வலோத்காரக் குற்றங்களுக்காகவும், ஒன்பது சிறுவர்கள்மீது பாலியல் குற்றங்கள் புரிந்ததற்கும், ஐ.நா. அமைதிகாப்பாளர்களாக பணியாற்றிக்கொண்டிருந்தவர்களில் குறைந்தபட்சம் 134 சிறீ லங்காவின் ஆயுதப்படையினர்மீது குற்றம் சாட்டப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் கூறுகிறது.  குற்றங்கள் வெளிக்கொணரப்பட்டபின் 114 ஸ்ரீலங்கா ஆயுதப்படையினர் நாட்டுக்குத் திருப்பியனுப்பப்பட்டபோதும், ​​அவர்களில் எவர் மீதும் சிறீ லங்கா நடவடிக்கை எடுக்கவில்லை,  இதுகுறித்து அட்வொகேட் இண்டரநாஷனல் பணியகத்தில்  பணியாற்றும் ஹெய்ட்டிய வழக்குரைஞரான மரியோ ஜோசப்   “துயரத்திற்குப் பின் துயரத்தை சந்தித்து அதைச் சகித்தவாறிருக்கும் ஒரு நாட்டில் நன்மைக்கு பதிலாக தீமையல்லாவா  ஐ.நா. செய்திருக்கிறது”  என்று தன் வேதனை உணர்வுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

முடிவாக, “நாடுகள் தங்கள் சொந்தக் குடிமக்களைக் கொல்லும் வரலாறு மீண்டும் மீண்டும் தொடர்வதை நாம் காண்கிறோம். சிறீ லங்கா, சிரியா, மியன்மார் என அண்மையில் சர்வதேச சட்டத்தினை ஒட்டுமொத்தமாகவும், முறைகேடாகவும் மீறும் போக்கானது,  கனடா போன்ற நாடுகள் உறுதியானதொரு நிலைப்பாட்டை எடுத்து நின்று காட்டாவிட்டால்  மேலும் மேலும் தொடரும். ஆகவே கனடாவில் சிறீ லங்கவின்  பொறுப்புக்கூறலுக்கான ஒரு புதிய பிரச்சாரத்தை இன்று ஆரம்பிக்கிறோம்” என திருமதி மல்லிகா வில்சன் தெரிவித்திருக்கிறார்.

கூட்டுக்குழுவிலிருக்கும் அமைப்புக்கள்:

 

கனடிய அமைப்புக்கள்:

கனடியத் தமிழர் பேரவை (Canadian Tamil Congress)

Centre for War Victims and Human Rights

கனடியத் தமிழர் தேசிய அவை (National Council of Canadian Tamils)

Quebec Tamil Development Association

கனடிய தமிழர் சமூக அமைய ம் (Tamil Canadians Civil Society Forum)

சர்வதேச அமைப்புக்கள்:

Australian Tamil Congress

British Tamils Forum

People for Equality and Relief in Lanka

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam)

United States Tamil Political Action Council

###

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers