குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அஹமட் ஜவாட் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கனேடிய தமிழ் அமைப்புக்கள் சில அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தன.
எதிர்வரும் 14ம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் சர்வதேச மாநாட்டில் இலங்கைப் படையதிகாரிகள் பங்கேற்பதற்கு அனுமதிக்கக் கூடாது என கனேடிய பிரதமரிடம் குறித்த நிறுவனங்கள் எழுத்து மூலம் கோரியிருந்தன. எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என உயர்ஸ்தானிகர் ஜவாட் தெரிவித்துள்ளார். குறிப்பாக கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment