இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

எனக்கு மூன்று கால்கள்! தீபச்செல்வன்:-

தெய்வங்களுக்குத்தான்
பல கால்கள்
பல கைகள்
சிவனுக்கு மூன்று கண்கள்
எனக்கு மூன்று கால்கள்
ஆனாலும்
ஒரு பாதணி போதும்
எனினும்
இரண்டு கால்கள் உள்ளவர்கள் பயணிக்கும்
தூரத்தையும் வேகத்தையும்
நான் தாண்டுவேன்.
இங்கெதுவும் நடக்கவில்லை
என அவர்கள் சொல்லக்கூடும்
எல்லாவற்றுக்குமான பதிலாய்
இந் நிலத்தில் நான் நடப்பேன்.
வரிகள்: தீபச்செல்வன்
புகைப்படம்: குளோபல் தமிழ் செய்தியாளர்

Add Comment

Click here to post a comment

Leave a Reply