இலங்கை பிரதான செய்திகள்

சிறுவர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச வைத்திய நிபுணர்கள் மாநாடு கொழும்பில்


சிறுவர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச வைத்திய நிபுணர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றையதினம்  கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன   தலைமையில் இடம்பெற்றது.  இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டுடன் இணைந்ததாக நடைபெறும் இம்மாநாடு,   எதிர்வரும் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறுவதுடன், 42 நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

சிறுவர் நோய் தொடர்பான சர்வதேச மட்டத்திலான அறிவை பகிர்ந்துகொள்வதற்கும், ஆய்வுகளை முன்வைக்கவும், தரங்களை அறிமுகப்படுத்தவும் இம்மாநாட்டின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் சிறுவர் நோய் தொடர்பான மருத்துவ விஞ்ஞான நிறுவனம் இம்மாநாட்டிற்கான வசதியளிப்புகளை வழங்குகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply