இந்தியா பிரதான செய்திகள்

கல்வீச்சு தாக்குதல்கள் 90 வீதமாக குறைந்துள்ளது – காஷ்மீர் காவல்துறை :

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கல்வீச்சு தாக்குதல்கள் 90 சதவீதமாக  குறைந்து விட்டதாகவும் அமைதி திரும்பி வருகிறது எனவும் காஷ்மீர் மாநில  காவல்துறை உயரதிகாரி டிஜிபி வைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவத்தினரின் தொடர் நடவடிக்கையால் பல பகுதிகளில் தீவிரவாதிகளின் செயல்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநிலத்தின் காவல்துறை, இராணுவம் மற்றும் உளவு அமைப்புகள் என்பன ஒருங்கிணைந்து செயற்படுவதால் கிடைத்த வெற்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் நாள்தோறும் 40 முதல் 50 கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வந்ததாகவும் தற்போது வாரத்திற்கு ஒரு சம்பவம்கூட நடப்பதில்லை எனவும் தெரிவித்த அவர்  மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனையால் மட்டும் இந்த சாதனை நடக்கவில்லை எனக் குறிப்பிட்ட வைத், கல்வீச்சு சம்பவங்களால் தங்களின் சொத்துகள்தான் சேதமடைகின்றன என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளதனால். சட்டம்- ஒழுங்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதேவேனை பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாகவும் இந்த வெற்றி கிடைத்துள்ளது எனவும்  தீவிரவாதிகளிடம் இருந்து ரூபாய் செல்லாததாக போனதும் முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பயங்கரவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் இந்த ஆண்டு மட்டும் 170 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கூறிய அவர் இவர்களில் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களும் அடக்கம் பெறுவதாகவும் இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனை என்றும் டிஜிபி வைத் மேலும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.