Home இலங்கை யாழில். இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் தமிழ் மக்களுக்காக நிதி ஒதுக்கவில்லை – விஜயகலா மகேஸ்வரன் கவலை.

யாழில். இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் தமிழ் மக்களுக்காக நிதி ஒதுக்கவில்லை – விஜயகலா மகேஸ்வரன் கவலை.

by editortamil

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக  மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம்  ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
இந்த வரவு செலவு திட்டமானது முன்னைய வரவுசெலவு திட்டத்துடன் ஒப்பிடும் போது வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் பாதுகாப்பு அமைச்சுக்கே கடந்த கால அரசாங்கம் அதிகளவான நிதியினை ஒதுக்கி இருந்தது. ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னாள் போராளிகள் , பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பெற்றோரை இழந்த சிறுவர்கள் , பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் ஆகியோரை கடந்த கால அரசாங்கம் கைவிட்டு இருந்தது. இந்த நல்லாட்சி அரசாங்கம் அவர்களை கவனத்தில் எடுத்து அவர்களுக்கு அதிகளவான நிதியினை ஒதுக்கி உள்ளனர்.
யாழில்.  இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது அவர்களுக்கு என  2750 மில்லியன் வடமாகாணத்திற்கு ஒதுக்கபப்ட்டு உள்ளது. அவர்களை மீள் குடியேற்றம் செய்வதற்கு என முஸ்லீம் மக்கள் புறக்கணிப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. அது முற்றிலும் தவறானது.
யாழில். இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு இந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை. வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் நலன்புரி முகாம்களில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களை இந்த அரசாங்கம் புறம் தள்ளியுள்ளது. அதனை நாங்கள் அரசாங்கத்திற்கு தெரியபப்டுத்துகின்றோம்.
நாங்கள் இனவாதம் பேசவில்லை. எங்களின் தமிழ் மக்கள் இன்னமும் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு நிரந்தர தொழில் வாய்ப்பு இல்லை அதனால் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கபப்ட்டு உள்ளது.
கடந்த கால அரசாங்கம் பேரினால் பாதிக்கபப்ட்ட முப்படைகளின் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளது. ஆனால் போரினால் பாதிக்கபப்ட்ட தமிழ் மக்கள் தொடர்பில் எதனையும் செய்யவில்லை.
எங்களை புறம் தள்ளி உள்ளனர். ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் போரினால் பாதிக்கபப்ட்டவர்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக விசாரணை அதிகாரிகளாக தமிழர்கள் நியமிக்கப்பட வேண்டும். – விஜயகலா மகேஸ்வரன்:-

காணாமல் ஆக்கப்பட்டார் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் தமிழ் மொழி பேசுபவர்களாக இருக்க வேண்டும் என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என கூறப்படும் இளைஞர் யுவதிகளை அவர்களின் குடும்பத்தினர் ஓமந்தை இராணுவ முகாமில் இராணுவத்தினரிடம் கையளித்து உள்ளனர். இது திட்டமிட்டு கடந்த கால அரசாங்கத்தால் இனப்படுகொலை செய்தமைக்கும் அப்பால் கொடூரமாக கொன்று குவித்து உள்ளனர். அதனால் தான் காணாமல் போனோர் அலுவலகம் திறப்பது தொடர்பில் பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றியும் , ஒரு வருட காலமாக ஜனாதிபதி அதற்கு கையொப்பம் வைக்கபப்டாத நிலையில் தான் காணமல் ஆக்கபப்ட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பிக்கபப்ட்டது.

நாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தான் 1400 மில்லியன் ரூபாய் நிதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்திற்கு என ஒதுக்கப்பட்டு உள்ளது காணமல் போனோர் அலுவகம் ஊடக விசாரணைகள் நடைபெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தீர்வினை வழங்க வேண்டும். குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் அது தான் உண்மையான நீதி.

எங்கள் நாட்டில் நடந்த குற்றங்களை எங்கள் நாட்டில் தான் விசாரிக்க வேண்டும். அதனை வெளிநாட்டில் விசாரிக்க முடியாது. காணாமல் ஆக்கபப்ட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை வடக்கு கிழக்கை சேர்ந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளோம் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More