இந்தியா பிரதான செய்திகள்

குஜராத் மாநிலத் தேர்தலுக்காக 60 ஆயிரம் பாதுகாப்பு படையினர்

இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத் தேர்தலின் போது  பாதுகாப்புப் பணிகளுக்காக சுமார் 60,000 பாதுகாப்புப் படையினரை அனுப்ப இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்  சிஐஎஸ்எப், பிஎஸ்எப், சிஆர்பிஎப், ஆர்பிஎப், ஐடிபிபி, எஸ்எஸ்பி முதலிய பாதுகாப்புப் படையினர் உள்ளடங்குகின்றனர். மேலும்  தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்களுக்காக சமையல்காரர்கள்,  சாரதிகள் மற்றும் பிற அலுவலக ஊழியர்களும் அனுப்பப்படுகின்றனர்.

அமைதியான முறையில் தேர்தலை நடாத்தவே இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும்   பாதுகாப்புப் படையினரின் தேர்தல் பணிக்காக 650  புகையிரதங்கள்  தயார் நிலையில் வைக்குமாறும்  புகையிரத  திஜணைக்களத்திடம் மத்திய அரசு கோரியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் 14ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 9 மற்றும் 14ஆம் திகதிகளில் 182 தொகுதிகளில் நடைபெற உள்ளது.   குஜராத் மாநிலத்தில் 43.3 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர். மாநிலத்தில் உள்ள 50,128 வாக்காளர் நிலையங்கள் அனைத்திலும் முதல்முறையாக விவிபாட் வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply