பிரதான செய்திகள் விளையாட்டு

சயீத் அஜ்மல் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

பாக்கிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான   சயீத் அஜ்மல் அனைத்து   கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும்   ஓய்வு  பெறுவதாக அறிவித்துள்ளார்.   இந்த மாதம் நடைபெறவுள்ள உள்ளூர் தொடர் முடிந்தவுடன் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற  உள்ளதாக தெரிவித்துள்ளார்.

40 வயதாகும்    சயீத் அஜ்மல் 2008-ம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரின்போது பாகிஸ்தான் அணியில் அறிமுகமானார். 2011-ம் ஆண்டில் இருந்து  அவர்  பாக்கிஸ்தான் அணியின்  முக்கியமான பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

35 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடி 178 விக்கெட்டுக்களை வீழ்த்திய அஜ்மல்     113 ஒருநாள் போட்டியில் 184 விக்கெட்டுக்களையும்  64 இருபதுக்கு இருபது   போட்டிகளில்  85 விக்கெட்டுக்களையும் ம் வீழ்த்தியுள்ளார்.

2009-ம் ஆண்டு மற்றும் 2014-ம் ஆண்டு இவர் விதிமுறைக்கு மாறாக பந்து வீசுகிறார்  எனத் தெரிவித்து ஐ.சி.சி. அவருக்கு பந்து வீச தடைவிதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply