இலங்கை பிரதான செய்திகள்

வீட்டுக்குள் புகுந்த பாம்பை அடித்து எரியூட்டிய குடும்பஸ்தர் பலி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில் வீட்டுக்குள் புகுந்த பாம்பை அடித்து  எரியூட்டிய போது  வெடிபொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.        குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்றை அடித்து தீயிடுகையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் நேரில் கண்டவர் தெரிவிக்கையில்,

நேற்று இரவு அவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று சென்றதாகவும், அதை அடித்து தமக்குக் காட்டிவிட்டு தீயிட்டுக்கொண்டிருக்கையில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் குறிப்பிட்டார். பின்னர் தாம் வைத்தியாலைக்கு அவரை அழைத்து சென்ற போதும்    அவர் உயிரிழந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்

மேலும்   அவரது குடும்பம் மிகவும் வறுமையானது எனவும், பிள்ளைகள் கல்விக்காக கஷ்டப்படுவதாகவும் குறிப்பிட்டார். அவரது குடும்பத்தினருக்கு உதவி செய்ய யாரும்  முன்வர வேண்டும் எனவும்  அவரது  குடும்பத்தில் ஒரு பிள்ளை செஞசோலை சிறுவர் இல்லத்தில் கல்வி பயில்வதாகவும் குறிப்பிட்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.