இந்தியா பிரதான செய்திகள்

GST கவுன்சிலின் வரி குறைப்பு நடவடிக்கை – 213 பொருட்களுக்கான விலைகள் குறைந்துள்ளன:-


GST கவுன்சிலின் 23-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட வரி குறைப்பு நடவடிக்கை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில் இதன்மூலம் 213 பொருட்களுக்கான விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

GST  கவுன்சிலின் 23-வது கூட்டத்தில் 213 பொருட்களின் வரி விகிதங்களை மாற்றி அமைக்க முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இதன்படி பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்துகிற 178 பொருட்களின் வரி விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 2 பொருட்களின் வரி விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், 13 பொருட்களின் வரி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. அத்துடன் 6 பொருட்களின் வரி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், 8 பொருட்களின் வரி வகிதம் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் மாற்றப்பட்டது. 6 பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிப்பு விலக்கிகொள்ளப்பட்டது. இந்தநிலையில் புதிய வரி விதிப்பு மாற்றங்கள் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply