இலங்கை பிரதான செய்திகள்

ஜாலிய விக்ரமசூரியவை உடனடியாக கைது செய்வதற்கான பிடியாணை :

 

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை உடனடியாக கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதியினால்  இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதுவராக கடமையாற்றிய காலத்தில்  காரியாலயத்திற்காக கட்டடம் ஒன்றை கொள்வனவு செய்த தருணத்தில் அமெரிக்க டொலர் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை முறையற்றவகையில் கையாண்டதாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறிது காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், மருத்துவத் தேவைக்காக வெளிநாடு செல்வதற்கான அனுமதியும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்து.    நிபந்தனையின் படி உரிய தினத்தில் மீண்டும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததன்  காரணமாகவே அவருக்கு எதிராக இன்று இவ்வாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.