இலங்கை பிரதான செய்திகள்

விடுதலை புலிகளினால் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த இரணைமடு காணி அளவிடப்படுகின்றது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ள அரச காணி அளவீட்டு பணிகள் இடம்பெற்ற வருகின்றன. விடுதலை புலிகளினால் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு  நூற்றுக்கணக்கான மக்களிற்கு வேலைவாய்பு வழங்கப்பட்ட  பண்ணைக்காணியே இவ்வாறு நில அளவீடு செய்யப்பட்டு வருகின்றது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி பின்னர் இராணுவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த காணியினை அளவீடு செய்யும் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  குறிதத் அளவீடு செய்யப்படும் காணியில் மக்களின் காணிகளும் காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

காணிகள் அளவீடு செய்வதன் நோக்கம் தொடர்பில் மக்கள் சந்தேம் எழுப்புவதோடு, காணிகள் நில அளவை செய்வதற்கான நோக்கம் பற்றி அறிந்துகொள்ளவும் முடியவில்லை

Add Comment

Click here to post a comment

Leave a Reply