உலகம் பிரதான செய்திகள்

பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.6 ரிக்டர் அளவில் பதிவானது – சுனாமி எச்சரிக்கை இல்லை:-.


பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை. அவுஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில் டடைன் பகுதியில் இன்று மாலை (இந்திய நேரப்படி) 3.16 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவுகோலாக பதிவானது. டடைன் பகுதிக்கு 324 கிமீ தொலைவில் சுமார் 89 கிமீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்தெ ரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.