குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலி கிங்தொட்ட சம்பவம் தொடர்பில் பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சில தரப்பினர் போலியான செய்திகளையும் தகவல்களையும் பரப்பி வருவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பொய்யான பிரச்சாரங்களை செய்து வரும் தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. பொது மக்கள் மத்தியில் பதற்ற நிலையை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
Add Comment