இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 – இலங்கை இந்திய பிரதமர்களுக்கு இடையில் சந்திப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை  இந்தியாவிற்கு சென்றுள்ள நிலையில் புதுடெல்லியில் வைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைப் பிரதமர் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திக்க உள்ளார். பிரதமரின் இந்த பயணத்தில் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap