குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போனோர் அலுவலகம் அடுத்த ஆண்டில் முழுமையாக இயங்க ஆரம்பிக்கும் என நல்லிணக்க பொறிமுறைமை இணைப்புச் செயலகத்தின் பொதுச் செயலாளர் மனோ தித்தவெல்ல தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதி முதல் இந்த அலுவலகம் முழுமையான அளவில் இயங்கும் என குறிப்பிட்டுள்ள அவர் காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர்களாக விரைவில் சிலர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்காக விண்ணப்பம் செய்யுமாறு கோரப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் அளித்த வாக்குறுதிக்கு அமைய காணாமல் போனோர் குறித்த அலுவலகம் நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment